Syamantaka Story - Tamil – Rosebazaar India

Watch us on Shark Tank!

Syamantaka Story - Tamil

Ganesh Chaturthi, Vinayaka Chaturthi, Ganesha, Ganesh stories, Syamanthaka

கிருஷ்ணர் துவாரகையில் வாழ்ந்து வந்த போது அங்கு சத்ரஜித் என்னும் அரசன் இருந்தார், அவர் சூரியபகவானின் தீவிர பக்தர் ஆவார். அவரின் பக்தியை மெச்சி சூரியதேவன் அவருக்கு சியாமாந்தகம் என்னும் அற்புத ரத்தினத்தை பரிசளித்தார். இந்த ரத்தினத்தை முழுமையான அர்ப்பணிப்புடன் யார் வழிபடுகிறார்களோ அவர்கள் அதிகளவு தங்கம் மற்றும் செல்வத்தை பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

சியாமாந்தகம் பற்றி கேள்விப்பட்ட கிருஷ்ணருக்கு அதனை பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால் சத்ரஜித்திற்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் சியாமாந்தகத்தை பார்க்க கிருஷ்ணரை அனுமதிக்கவில்லை. கிருஷ்ணர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

சிலநாட்களுக்கு பிறகு சந்திரனின் நான்காவது நாளில் கிருஷ்ணரின் மனைவி அவருக்கு இனிப்பை பரிமாறினார். சாப்பிடும் போது கிருஷ்ணர் உணவில் விநாயகரின் சாபத்தால் பாதிக்கப்பட்ட பிறைநிலவின் பிரதிபலிப்பை பார்த்தார். இதனால் தானும் விநாயகரின் சாபத்தால் பாதிக்கப்பட போவதை உணர்ந்தார் கிருஷ்ணர். ஏனெனில் விநாயகரின் சாபத்தின் படி நான்காம் நாளில் பிறை நிலவை பார்ப்பவர்கள் தேவையில்லாத குற்றசாட்டுகளுக்கும், அவதூறுகளுக்கும் ஆளாக நேரிடும்.

அதேநாளில் சத்ரஜித்தின் சகோதரர் ப்ரசேனா சியாமாந்தக ரத்தினத்தை எடுத்துக்கொண்டு வேட்டைக்கு சென்றார். அப்போது அவர் ஆவேசமான சிங்கம் ஒன்றால் கொல்லப்பட்டார், அவரை தாக்கிய சிங்கம் ஒளிரும் சியாமாந்தக ரத்தினத்தை தவறுதலாக தனது குகைக்கு எடுத்து சென்று விட்டது. ப்ரசேனாவின் உடலும், சியாமாந்தக கல்லும் சிங்கத்தின் குகைக்குள் மாட்டிக்கொண்டது.

ஜாம்பவந்தா என்னும் மாயக்கரடி அந்த சிங்கத்தை கொன்று அந்த சியாமந்தாக ரத்தினத்தை தன் மகள் ஜாம்பவதிக்கு கொடுத்துவிட்டது. மறுபுறம் ப்ரசேனா அரண்மனை திரும்பாததால் சியாமாந்தகம் மீதான பேராசையால் கிருஷ்ணர்தான் தன் சகோதரனை கொன்று விட்டார் என்று அவர் சந்தேகப்பட்டார். இந்த சந்தேகம் நாட்டில் இருந்த அனைவருக்கும் பரவியது. இந்த அவதூறு கிருஷ்ணரின் மனதை வெகுவாக பாதித்தது. எனவே கிருஷ்ணரே ப்ரசேனாவை தேடி வனத்திற்கு சென்றார் அங்கு குகைக்கு வெளியே ப்ரசேனா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சிங்கத்தின் காலடி தடத்தை தொடர்ந்து குகைக்குள் சென்ற கிருஷ்ணர் அஜ்ஜு ஜாம்பவதி சியாமாந்தக ராதை வைத்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். கிருஷ்ணர் தன் மகளைத்தான் தாக்க வருகிறாரோ என்று அச்சமடைந்த ஜாம்பவந்தா தன்னுடன் போர்புரியும் படி கிருஷ்ணருக்கு அறைகூவல் விடுத்தார். இருவருக்குமிடையேயான போர் 28 நாட்கள் தொடர்ந்து நடந்தது. கிருஷ்ணர் சாதாரண மனிதர் என்பதை உணர்ந்த ஜாம்பவந்தா கிருஷ்ணருடைய உண்மையான உருவத்தை காட்டும்படி கூறினார்.

ஜாம்பவந்தாவிற்கு தன் சுயரூபத்தை காட்டிய கிருஷ்ணர் தான்தான் கடந்த ஜென்மத்தில் இராமராக பிறந்தததாகவும் கூறினார். தன் தவறை உணர்ந்த ஜாம்பவந்தா கிருஷ்ணரிடம் மன்னிப்பு கோரினார். மேலும் சியாமாந்தகத்தை கிருஷ்ணரிடமே ஒப்படைத்ததுடன் தன் மகள் ஜாம்பவதியையும் கிருஷ்ணருக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். கிருஷ்ணரின் எட்டு மனைவிகளுள் ஜாம்பவதியும் ஒருவராக மாறினார்.

வனத்தில் இருந்து திரும்பிய கிருஷ்ணர் நேரடியாக சத்ரஜித்தின் அரண்மனைக்கு சென்று அவரது சகோதரின் இறந்த உடலையும், சியாமந்தாக ரத்தினத்தையும் ஒப்படைத்தார். தனது தவறை உணர்ந்த சத்ரஜித் அதற்கு பரிகாரமாக தனது மகள் சத்யபாமாவை கிருஷ்ணருக்கு திருமணம் செய்து வைத்தார். மேலும் சியாமாந்தகத்தையும் கிருஷ்ணருக்கே வழங்கினார்.

 

https://tamil.boldsky.com/insync/pulse/2019/how-lord-ganesha-s-curse-affected-lord-krishna-024795.html

Leave a comment

Name .
.
Message .

Please note, comments must be approved before they are published