Ganesh-Moon Story - Tamil
ஒரு நாள் சந்திரன் தன் குளுமையான ஒளியை வீசிக்கொண்டிருந்த போது, மூஷிக வாகனத்தில் பால கணபதி சென்று கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கே ஒரு பாம்பு வேகமாக செல்ல முற்பட்டது. அதனால் பயந்துபோன முஷிகன் திடீரென நின்றார். அதன் மீது இருந்த பால கணபதி கீழே விழுந்தார். அவர் வைத்திருந்த மோதங்களும் கீழே சிதறின. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சந்திரன் கணபதியைப் பார்த்து சிரித்தார்.
தான் கீழே விழ காரணமாக இருந்த பாம்பை பிடித்து, மோதகங்கள் உள்ளை பையை தன் இடுப்பில் கட்டிக்கொள்ளப்போவதாக கூறியதும், பாம்பு பயந்து ஓடியது. அதை பிடிக்க முயலும் போது மீண்டும் விழ நேர்ந்தது. அப்போதும் சந்திரன் கணபதியைப் பார்த்து குண்டு கணபதி கொழுகட்டை போல இருப்பதால் விழுந்துவிட்டான் என சிரித்தார்.
இதனால் கோபமடைந்த பால கணபதி, என் உருவத்தை பார்த்தா பரிகசிக்கிறாய் என சந்திரனைப் பார்த்து, உன் ஒளி பொருந்திய மேனி தானே உன் சிறப்பு. உன் ஒளி மங்கி போகட்டும், உன்னை காண்பர்களுக்கும் சங்கடம் உண்டாகும் என சபம் அளித்தார்.
தான் கேலி செய்யவில்லை, உங்களின் குழந்தை விளையாட்டை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். என்னை மன்னியுங்கள் என கேட்க, என்னால் கொடுத்த சாபத்தை முழுவதுமாக திரும்ப பெற முடியாது.
உன் ஒளி மங்கி மீண்டும் பெருகட்டும், ஒளி குறைவதை அமாவாசை (தேய்பிறை) என்றும், முழு ஒளியுடன் இருப்பது பெளர்ணமி (வளர்பிறை) என்றும் அழைக்கப்படும் என கணபதி, சந்திரனுக்கு அருளினார்.