Ganesh Birth Story - Tamil

கைலாச மலையில் பார்வதி தனிமையாக உணர்ந்த போது, அவர் உடலில் இருந்த அழுக்கையெல்லாம் திரட்டி ஒரு சிறுவனின் சிலையை செய்தாராம். பிறகு அதை உயிர்ப்பித்து கணேசர் என்ற பெயரும் சூட்டினார். பின் தான் குளிக்கச் செல்லும் போது, வாயிலைக் காக்க கணேசரை பணித்துவிட்டு குளிக்கச் சென்றாராம்.
அப்போது அங்கே வந்த சிவனை கணபதி தடுக்க, கோபம் கொண்ட சிவன் கணபதியின் தலையை சீவிவிட்டாராம். கணபதியின் அலறலைக் கேட்ட பார்வதி ஓடிவந்து, அவரின் நிலையை கண்டு கோபம் கொண்டாராம். அதுமட்டுமல்லாது அவரது மகன் கணபதி மீண்டும் உயிர்பெறவில்லையென்றால் உலகத்தையே அழிக்கப்போவதாக சூளுரைத்தாராம். அங்கு நடந்த குழப்பத்தில் கணபதியின் தலையைக் காணவில்லை.
பிறகு கிங்கரர்களை அழைத்த சிவன், காட்டிற்கு சென்று முதன்முதலில் தென்படும் மிருகத்தின் தலையை எடுத்து வாருங்கள் எனப் பணிக்கவே, அவர்களும் அவ்வாறே ஒரு யானையின் தலையை எடுத்து வந்தார்கள். பிறகு கணபதியின் தலை இருந்த இடத்தில் ஒரு வெள்ளை யானையின் தலையை மாட்டி, அவரை உயிர்ப்பித்தாராம் சிவன்.
Source:https://tamil.boldsky.com/insync/2013/versions-the-ganesha-birth-story-003888.html